முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "சிம்புவுக்கு திருமணம் நடந்தால்..."- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூல் சுரேஷ் ஓபன் டாக்!

"சிம்புவுக்கு திருமணம் நடந்தால்..."- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூல் சுரேஷ் ஓபன் டாக்!

கூல் சுரேஷ் - சிம்பு

கூல் சுரேஷ் - சிம்பு

நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படம் வெற்றிபெற மீனாட்சி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்த நடிகர் கூல் சுரேஷ், சிம்புவுக்கு ரசிகர்கள் முன்னிலையில் தான் திருமணம் நடைபெறும் என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படம் வெற்றிபெற மீனாட்சி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்த நடிகர் கூல் சுரேஷ், சிம்புவுக்கு ரசிகர்கள் முன்னிலையில்தான் திருமணம் நடைபெறும் என தெரிவித்தார்.

திரைப்பட நடிகர் சிலம்பரசன் நடிப்பில் மார்ச் 30ம் தேதி திரைக்கு வரவிருக்கும் பத்துதல திரைப்படம் வெற்றி அடைய வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் கூல் சுரேஷ் சிறப்பு வழிபாடு நடத்தி 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.

பின்னர் பேட்டியின் போது பேசிய கூல் சுரேஷ், "பத்துதல திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினோம்.  படம் நிச்சயம் வெற்றி பெறும், STR இன் பத்துதல, சிம்பு ரசிகர்கள் கெத்து தல" என்றார்.

நடிகர் சிம்புவிற்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு,

"நடிகர் சிம்புவிற்கு திருமணம் ஒன்று நடந்தால் பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் முன்னிலையில்தான் நடக்கும். அப்படியாகவே டி. ராஜேந்திரன் சிம்புவை பொறுப்புடன் வளர்த்துள்ளார். அந்த விருந்தில் நிச்சயம் எல்லோரும் சந்திப்போம்" என்றார்

First published:

Tags: Silambarasan, Simbu