• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘காசேதான் கடவுளடா’ படத்தில் இணைந்த குக் வித் கோமாளி புகழ்..

‘காசேதான் கடவுளடா’ படத்தில் இணைந்த குக் வித் கோமாளி புகழ்..

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ’காசேதான் கடவுளடா’படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  • Share this:
மிர்ச்சி சிவா, மிகப்பெரிய பிரபலமான ரேடியோ ஜாக்கி. ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கியவர், தன் நகைச்சுவை மற்றும் டைமிங் சென்ஸ் மூலம் மக்களை பெரிதும் கவர்ந்தார். அது மட்டுமின்றி, வெள்ளித்திரையில் காலடி வைத்த இவர் தன்னுடைய அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுத்தார். சி.எஸ் அமுதன் இயக்கிய, நையாண்டி, நகைச்சுவை திரைப்படங்கள், தமிழ்ப்படம் 1 மற்றும் 2 பாகங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதேபோல, யோகி பாபுவும், தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நாயகனாக வளர்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக, திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்து யோகி பாபு, தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். ரஜினிகாந்த், அஜித், விஜய், உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார். மறைந்த நடிகர் முத்துராமன், தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் ஆச்சி மனோரமா ஆகியோர் நடித்த, கிளாசிக்-நகைச்சுவைத் திரைப்படமான ‘காசேதான் கடவுளடா’ திரைப்படத்தின் ரீமேக்கில் மிர்ச்சி சிவாவும், யோகி பாபுவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



இந்த ரீமேக் திரைப்படத்தை இயக்குவது, கண்ணன். இதிலே, முத்துராமன் பாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் ஸ்ரீனிவாசன் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கூடுதலாக, ஆச்சி மனோரமாவின் வேடத்தில் நடிகை ஊர்வசியும், நடிகை லக்ஷ்மியின் பாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கப்போவதாக கூறப்படுகின்றன. மேலும், கருணாகரன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்

Also Read : ரஞ்சித்தை பாராட்டமாட்டேன், ஒருநூறு முத்தம் தருவேன்.. நாசர் நெகிழ்ச்சி

 



இந்நிலையில், சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளியில்’ இருந்து ஒருவர் இந்த படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, குக்கு வித் கோமாளி சிவாங்கி இந்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளிவந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவரைத் தொடர்ந்து, தற்போது மற்றொருவரும் இந்த படத்தில் இணைகிறார்கள் என்று கூறப்பட்டது. அந்த பிரபலம் யார்?


சில நாட்களுக்கு முன்பு, பட பூஜை போடப்பட்ட நிலையில், சமீபத்தில், இந்த திரைப்படக் குழுவினருடன் இணைந்துள்ளது, விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி புகழ்! மிகப்பெரிய பேரும் புகழும் பெற்ற புகழ் இந்த திரைப்படத்தில் சமீபத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே, பல திரைப்படங்களில் நடித்து வரும், ஒப்பந்தம் போட்டிருக்கும் குக்கு வித் கோமாளி புகழ், தற்போது கிளாசிக் ஹிட் திரைப்படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.



மிர்ச்சி சிவா, யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி, மற்றும் சமீபத்தில் தங்களின் நகைச்சுவை உணர்வால் அனைவரையும் கட்டியிழுத்த சிவாங்கி மற்றும் புகழ், ஆகியோர் நடிக்க இருக்கும் இந்த ரீமேக் திரைப்படம், நகைச்சுவை சரவெடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: