பிரபல இயக்குனரின் புதிய படத்தில் நடிக்க உள்ள குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்? - விரைவில் அறிவிப்பு!
பிரபல இயக்குனரின் புதிய படத்தில் நடிக்க உள்ள குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்? - விரைவில் அறிவிப்பு!
அஸ்வின் குமார்
குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடலை யூடியூபில் வெளியிட்டிருந்தார் அஸ்வின். அந்த பாடல் மிகவும் பிரபலமடைந்து ஒரு மில்லியனுக்கும் மேல் வியூஸ் பெற்ற நிலையில், 'அடிபொலி' என்ற மற்றொரு பாடலில் நடித்திருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலமாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவிற்கு ஊரடங்கு காலத்தில் மக்கள் ரசித்து பார்த்த ஷோவாக குக் வித் கோமாளி புகழ் பெற்றது. முதல் சீசனை விட மிகவும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்குபெற்ற போட்டியாளர்கள் பிரபலமானார்கள்.
இதில் கனி முதல் பரிசை தட்டி சென்ற நிலையில், இரண்டாவது ரன்னர் அப்-ஆக நடிகர் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு சிங்கிள் டிராக்குகள், ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்த அஷ்வின் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் எண்ணற்ற ரசிகர், ரசிகர்களை பெற்றார். நிகழ்ச்சி முடிந்த கையோடு புதிய படங்களில் ஹீரோவா ஒப்பந்தம் ஆன நிலையில் இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.
தற்போது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி 2ல் பிரபலமடைந்த புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா , டெல்லி கணேஷ் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் துணை வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையே குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடலை யூடியூபில் வெளியிட்டிருந்தார் அஸ்வின். அந்த பாடல் மிகவும் பிரபலமடைந்து ஒரு மில்லியனுக்கும் மேல் வியூஸ் பெற்ற நிலையில், 'அடிபொலி' என்ற மற்றொரு பாடலில் நடித்திருந்தார். 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் இசை மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த இசையமைப்பாளர் சித்து குமார் இந்த பாடலுக்கு இசையமைத்த நிலையில் இந்த பாடல் பாடலை ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள நடிகர் மோகன் லால், மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்டனர். அஸ்வின் குமார், குஷி நடிப்பில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ஷிவாங்கி இந்த பாடலை பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஸ்வின் ரசிகர்களுக்கு மற்றொரு செய்து ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனரான பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிகர் அஸ்வின் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபு சாலமன் தற்போது 'கும்கி 2' படத்தை அறிமுக நாயகர்களான மதி மற்றும் ரித்தா ராவ் ஆகியோரை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் அஸ்வின் நடிக்க உள்ள படம் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.