• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Ashwin Kumar: எப்போதும் நன்றியுடன் இருப்பேன் .. அஸ்வின் பகிர்ந்த அழகிய புகைப்படம்..

Ashwin Kumar: எப்போதும் நன்றியுடன் இருப்பேன் .. அஸ்வின் பகிர்ந்த அழகிய புகைப்படம்..

அஸ்வின் குமார்

அஸ்வின் குமார்

Cook With Comali Ashwinkumar : குக்கு வித் கோமாளி சீசன் 2 தொடங்கி கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி தொடங்கியது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளியின் சீசன் 2 பலருக்கும் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியது. சீசன் 2வில் பங்கேற்ற போட்டியாளர்கள், கோமாளிகள் மட்டுமின்றி, நடுவர்களுக்கும் லட்சக்கணக்கான ரசிகர் கூட்டத்தை உருவாகியுள்ளது. இதில் அனைவரையும் விட மிகப்பெரிய உயரத்தை எட்டியவர் நடிகர் அஸ்வின் குமார். விஜய் டிவி சீரியல்களிலும், பல குறும்படங்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் ஏற்கனவே அஸ்வின்குமார் நடித்திருந்தாலும் குக்கு வித் கோமாளியின் மூலம் இவர் புகழின் உச்சத்தை அடைந்தார்.

குக்கு வித் கோமாளி நடந்து கொண்டிருக்கும் போதும் சரி, நிகழ்ச்சி முடிந்த பிறகும், அஸ்வின்குமார் என்ன செய்தாலும் வைரலாகும் அளவுக்கு அவரின் ஒவ்வொரு பதிவும், அவரைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது. குறிப்பாக, அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடிக்கென்றே பிரத்யேகமான ரசிகர் கூட்டம் உள்ளது.

குக்கு வித் கோமாளி ஷோவிற்கு பிறகு மியூசிக் ஆல்பங்களில் நடித்து, அது யூடியூப்பில் சாதனை படைத்தது என்பதும் அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து, தற்போது திரைப்படத்தில் நடித்து வரும் அஸ்வின்குமார், ‘நான் பழசை எப்போதுமே மறப்பதில்லை’ என்பதை உணர்த்தும் விதமாக ‘எப்போதும் நன்றியோடு இருப்பேன்’ என்று தன்னுடைய நினைவுகளை அழகிய கொலாஜ் ஒன்றை உருவாக்கி அதன் வழியே பகிர்ந்துள்ளார்.

also read : அழகே நீ எங்கிருக்கிறாய்.. சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

குக்கு வித் கோமாளி சீசன் 2 தொடங்கி கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி தொடங்கியதை கொண்டாடும் விதமாக, புகைப்படங்கள் கொலாஜ் பகிரப்பட்டுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் குக்கு வித் கோமாளி சீசன் 2 ஷூட்டிங்கில் நடைபெற்ற பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அஸ்வின் பகிர்ந்த புகைப்படம் இங்கே.,



சமீபத்தில், ஹாட்ஸ்டார் இல் வெளியான ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் அஸ்வின்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அஸ்வினின் ஆல்பங்களான ‘குட்டி பட்டாஸ்’ யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய ஹிட் ஆனது. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டதோடு மட்டுமல்லாமல், பல சாதனைகளையும் படைத்தது. அதைத் தொடர்ந்து, ஓணம் ஸ்பெஷலாக, ‘அடிப்பொலி’ ஆல்பமும் அஸ்வினின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

also read : தேவதை போல் இருக்கும் ராஷி கன்னாவின் புகைப்படங்கள்..

அதைத்தொடர்ந்து, தனது முதல் திரைப்படமாக, என்ன சொல்லப் போகிறாய்’ என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ ஒரு அழகான காதல் கதை என்று கூறப்படுகிறது இதில் அஸ்வினுக்கு ஜோடியாக தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா என்று இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள். மேலும், குக்கு வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு தான், அஸ்வின் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: