Home /News /entertainment /

நீங்கதான் எனக்கு மகனாக பொறக்கனும்னு கடவுள வேண்டிக்கிறேன் - குக் வித் கோமாளி புகழ் உருக்கம்!

நீங்கதான் எனக்கு மகனாக பொறக்கனும்னு கடவுள வேண்டிக்கிறேன் - குக் வித் கோமாளி புகழ் உருக்கம்!

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ் தனது நீண்ட நாள் காதலி பென்சியாவை கடந்த 1-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நீங்கதான் எனக்கு மகனாக பொறக்கனும்னு கடவுள வேண்டிக்கிறேன் என்று குக் வித் கோமாளி புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற புகழ், தற்போது வெள்ளித்திரையில் பிஸியான நகைச்சுவை நடிகராகவும் மாறிவிட்டார். தற்போது ஏ.ஆர். முருகதாஸின் 'ஆகஸ்ட் 16 1947', விஜய் சேதுபதியின் 46-வது படம் மற்றும் சந்தானத்தின் 'ஏஜெண்ட் 'கண்ணாயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 1-ம் தேதி புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    Also read... தனுஷின் நானே வருவேன் படம் குறித்து இன்று மாலை வெளியாகும் முக்கிய அப்டேட்!



     




    View this post on Instagram





     

    A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)






    இதனைத் தொடர்ந்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை புகழ் வெளியிட்டுள்ளார். அதில், இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் மாமா.. உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கனும்னு நம்பறேன். எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா... என்று மறைந்த காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி குறித்து தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி