Cook With Comali Pugazh: ’குக் வித் கோமாளி’ புகழ் காதலியுடன் ரகசிய திருமணம்?

விஜய் டிவி புகழ்

அந்த பெண் முஸ்லீம் என்றும், குடும்பங்களுடன் பிரச்சினைகள் இருந்ததால், அவர்கள் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

  • Share this:
    ’குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ் தனது நீண்ட நாள் காதலியை மணந்ததாக வந்த செய்தியை மறுத்துள்ளார்.

    நடிகராக வேண்டும் கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. இந்த ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்திலும் அவர் கலந்துக் கொண்டார். புகழ் தனது வேடிக்கையான காமெடி கவுண்டர்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளதோடு, சமூக ஊடகத்தில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்களையும் வைத்துள்ளார்.

    புகழ் தற்போது தமிழ் திரையுலகிலும் கால் பதித்துள்ளார். பொன்ராம் இயக்கும் விஜய் சேதுபதியின் பெயரிடப்படாத படம், 'குக் வித் கோமாளி 2' அஸ்வின் குமார் நடிக்கும் படம் என சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே பூட்டுதலின் போது புகழ் தனது நீண்ட கால காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அந்த பெண் முஸ்லீம் என்றும், குடும்பங்களுடன் பிரச்சினைகள் இருந்ததால், அவர்கள் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாகவும் அதோடு குறிப்பிடப்பட்டிருந்தது.



    இந்த செய்தியை மறுத்த புகழ் இது வெறும் வதந்தி என்றும், நல்ல நடிகராக மாறுவதில் மட்டுமே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளார். அதோடு தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்ட அவர், “அஞ்சியும் வாழாதே கெஞ்சியும் வாழாதே.. உனக்கான வாழ்க்கையை வாழ்” என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: