Valimai: 'வலிமை’யில் நடித்தது குறித்து ‘குக் வித் கோமாளி’ புகழ் ட்வீட்!

விஜய் டிவி புகழ்

நேற்று மாலை 6 மணிக்கு வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இத்தனை நாள் காத்து கிடந்த ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக அமைந்தது.

  • Share this:
    ’வலிமை’ படத்தில் நடித்தது மகிழ்ச்சியளிப்பதாக ‘குக் வித் கோமாளி’ புகழ் தெரிவித்திருக்கிறார்.

    சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என வித்தியாசமான கதைக்களத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர் ஹெச்.வினோத். அடுத்து அஜித்திடம் கதை சொல்லி, அவரது சம்மதத்தையும் பெற்றார். அந்த நேரத்தில் போனி கபூருக்கு படம் பண்ணித்தர வேண்டியிருந்ததால், இந்தி பிங்கின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். இயக்குநருக்கு ஏன் அலைய வேண்டும் என்று பிங்க் தமிழ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை வினோத்திடம் அளித்தார். நேர்கொண்ட பார்வையாக அப்படம் வெளியானது. இதையடுத்து மீண்டும் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் வலிமை படத்தின் வேலைகளை தொடங்கப்பட்டது. தற்போது வலிமை படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    படம் ஆரம்பித்ததிலிருந்து ‘வலிமை’யின் அப்டேட் கேட்டு வந்தனர் ரசிகர்கள். ஆனால் அவர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் தயாரிப்பு தரப்பில் ‘பர்ஸ்ட் லுக்’ உட்பட வேறெந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு மைதானங்கள் என கிடைக்கும் கேப்பில் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர் ரசிகர்கள்.



    இதற்கிடையே நேற்று மாலை 6 மணிக்கு வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இத்தனை நாள் காத்து கிடந்த ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக அமைந்தது. இந்நிலையில் ‘வலிமை’ படத்தில் தான் நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ‘குக் வித் கோமாளி’ புகழ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: