தளபதி 65 படத்தில் நடிக்கிறேனா? - குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி விளக்கம்

தளபதி 65 படத்தில் நடிக்கிறேனா? - குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி விளக்கம்

பவித்ரா லட்சுமி

தளபதி 65 படத்தில் தான் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து குக்வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் விஜய். ‘தளபதி 65’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

சென்னையில் படபூஜையை முடித்த படக்குழு தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் குக்வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பவித்ரா லட்சுமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த பவித்ரா லட்சுமி, “நான் தளபதி 65 படத்தில் நடிக்கிறேனா. நானே இப்போதுதான் இத்தகவலை கேள்விப்படுகிறேன். நீங்கள் சொல்லி அது நடந்தால் உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற பவித்ரா லட்சுமி ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். யார்க்கர் ஃபிலிம்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிற கிஷோர் ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published: