Samantha: ’குக் வித் கோமாளி’ பவித்ராவின் “மித்ரா” தோற்றம் குறித்து சமந்தாவின் கருத்து!

Samantha: ’குக் வித் கோமாளி’ பவித்ராவின் “மித்ரா” தோற்றம் குறித்து சமந்தாவின் கருத்து!

சமந்தா - பவித்ரா

“குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றதிலிருந்து, பவித்ரா லட்சுமியின் தோற்றம் முன்னணி நடிகை சமந்தாவுடன் ஒப்பிடப்படுகிறது.

  • Share this:
    “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றதிலிருந்து, பவித்ரா லட்சுமியின் தோற்றம் முன்னணி நடிகை சமந்தாவுடன் ஒப்பிடப்படுகிறது.

    பவித்ராவின் ஃபோட்டோ ஷூட்களின் பல படங்கள் உண்மையில் ’தெறி’ நடிகையின் தோற்றத்தை ஒத்திருக்கின்றன. ஆச்சரியமாக, விஜய் டிவி புகழ் பவித்ரா லட்சுமி பெயரில் இயங்கும் போலி கணக்கிற்கு பதிலளித்த சமந்தா, அதை ஒப்புக் கொண்டார். சமந்தாவின் ட்வீட்டால் மிரண்டு போன பவித்ரா, அந்த போலி கணக்கு குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளங்களில் தெளிவுப்படுத்தினார். அதோடு சமந்தாவுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

    தெறி படத்தில் சமந்தாவின் மித்ரா தோற்றத்தை மறு உருவாக்கம் செய்திருந்தார் பவித்ரா. அந்தப் படத்தை பவித்ராவின் போலி கணக்கில் பகிர்ந்து, நான் எப்படி இருக்கிறேன் எனக் கேட்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சமந்தா, ‘யூ லுக் பியூட்டிஃபுல்’ எனப் பதிலளித்திருந்தார்.

    “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி பவித்ரா லட்சுமிக்கு பெரும் ரசிகர்களைப் பெற்றது. அந்த ரியாலிட்டி ஷோ-வில் நிகழ்ச்சியின் நடுவர்களை ஈர்க்கும் பொருட்டு சுவையான உணவுப் பொருட்களை தயாரித்தார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி மற்றும் இணைய பார்வையாளர்களிடையே பெரும் வெற்றியைப் பெற்றது. பெண்கள் மட்டுமல்ல, கல்லூரி இளைஞர்கள் கூட, பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியைக் கொண்டாடத் தொடங்கினர். ஏனெனில் இது மற்ற சமையல் நிகழ்ச்சிகளைப் போலல்லாமல் நகைச்சுவையிலும் கவனம் செலுத்துகிறது.

    சமந்தாவின் பதிலைக் கண்ட பவித்ரா, தனது அனைத்து சமூக வலைதளங்களிலும் அந்த ட்வீட்டை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். "உங்கள் பதிலுக்கு நன்றி. இந்த ஃபோட்டோஷூட் "மித்ரா" என்ற கதாபாத்திரத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என செய்தோம். நாங்கள் அனைவரும் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர் என்பதை மறந்துவிடக் கூடாது. நான் உங்கள் போல 1% கூட இல்லை. அந்த ஐடி எனக்கு சொந்தமானது அல்ல. நன்றி மேம்” எனத் தெரிவித்திருந்தார் பவித்ரா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: