விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அருண் விஜய்யுடன் ஒரு படத்திலும் அது தவிர மற்ற சில படங்களிலும் நடித்து வருகிறார் புகழ். அதேபோல் ஷிவாங்கி சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார். தர்ஷா குப்தாவும் ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வரிசையில் தற்போது பவித்ரா லட்சுமியும் இணைந்துள்ளார்.
ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன், விஜய் சேதுபதியின் கவண், விஜய்யின் பிகில் உள்பட ஏராளமான திரைப்படங்களை தயாரித்த பிரமாண்ட நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட். இவர்கள் தங்களின் 21 வது படைப்பாக சதீஷ், பவித்ரா லட்சுமி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்கள். வித்தியாசமான கதையம்சத்துடன் தயாராகும் இந்தப் படத்தில் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன், ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கின்றனர். குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி நாயகியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பல குறும்படங்களை இயக்கியவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறவருமான கிஷோர் ராஜ்குமார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். "மிகவும் வித்தியாசமான இந்த கதையை நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளேன். குடும்பத்தோடு திரையரங்கில் கண்டுகளிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும்" என்றார் அவர். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.