• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் குட்டி பட்டாஸ் பாடல் சாதனை

குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் குட்டி பட்டாஸ் பாடல் சாதனை

தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதால் பாட்டு குழுவினர் இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்

 • Share this:
  பிரபல மாடலாக இருந்த அஸ்வின் குமார் சார்ட் பிலிம்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்த நிலையில் பிரபல குக் வித் கோமாளி சீசன் 2ல் பங்கேற்றதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

  ஊரடங்கு காலத்தில் மக்கள் ரசித்து பார்த்த ஷோவாக குக் வித் கோமாளி புகழ் பெற்றது. குறிப்பாக ஷிவாங்கி, புகழ், அஸ்வின் நிகழ்ச்சியின் போது செய்த நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால் இவர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகினர். குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார். இதன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த அஸ்வினுக்கு ரசிகைகளும் அதிகரித்தனர்.

  Also Read : அர்ச்சனா மீண்டும் சின்னத்திரையில் எப்போது? மகள் சாரா கொடுத்த அப்டேட்

  குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் குட்டி பட்டாஸ், கிரிமினல் க்ரஷ் உள்ளிட்ட ஆல்பம் பாடல்களில் நடித்திருந்த நிலையில், இந்த பாடல்கள் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குசூப்பர் ஹிட்டாக மாறியது, சமீபத்தில் யூடியூப்பில் இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடலில் அஸ்வின், ரெபா மோனிகா ஜானுடன் நடனம் ஆடியிருந்தார். சந்தோஷ் தயாநிதி, ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் இந்த பாடலை பாடியிருந்த நிலையில் சாண்டி மாஸ்டர் நடன இயக்குனரான இருந்தார்.

  தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதால் பாட்டு குழுவினர் இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் அஸ்வின், ரெபா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து தனது ரசிகர்களுக்கு அஸ்வின் இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சாண்டி மாஸ்டருடன் குட்டி பட்டாஸ் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார்.

  Also Read : 4 அல்ல... 40 திருமணம் கூட செய்துகொள்வேன்: வனிதா விஜயகுமார்

  இதனிடையே அஸ்வின் சமீபத்தில் யூடியூப் புகழ் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா ஜோடியாக 'என்னா சோல்லா போகிராய்' படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நகர்ப்புற பின்னணியில் இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது, இது முற்றிலும் சென்னையில் படமாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படம், காதல், காமெடி கலந்து உருவாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதி தொடங்கவிருக்கிறது. ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் நிலையில், விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளனர். இந்த படத்திற்கு பூஜை செய்த புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: