Dharsha Gupta: ’ருத்ர தாண்டவம்’ படத்திற்கு டப்பிங்கை முடித்த தர்ஷா குப்தா!

தர்ஷா குப்தா

படத்திற்காக டப்பிங் பேசும் படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் தர்ஷா.

  • Share this:
    தனது முதல் படத்தின் டப்பிங்கை முடித்திருப்பதாக ’குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா, தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி 2'யில் போட்டியாளராக பங்கேற்ற தர்ஷா குப்தா ரசிகர்களிடம் வெகுவாக பிரபலமானார். தற்போது அவர் 'திரெளபதி' புகழ் மோகன் ஜி இயக்கி வரும் 'ருத்ர தாண்டவம்' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இது தான் தர்ஷாவின் முதல் படம். இதில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.



     




    View this post on Instagram





     

    A post shared by Dharsha (@dharshagupta)






    ருத்ர தாண்டவம் படத்திற்கான தனது பகுதிகளை முடித்துக் கொடுத்த தர்ஷா, படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங்கும் பேசியுள்ளார். தற்போது படத்திற்கான டப்பிங்கையும் முடித்துள்ளார்.

    படத்திற்காக டப்பிங் பேசும் படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் தர்ஷா. மானிட்டர் திரையில் காட்டப்பட்டுள்ள அவரது தோற்றம், தனது கதாபாத்திரத்திற்கு முழு வடிவம் கொடுக்கவே சொந்த குரலில் தர்ஷா டப்பிங் செய்திருப்பதாகக் காட்டுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: