ஹீரோவாகிறார் குக் வித் கோமாளி அஸ்வின் - காமெடி கேரக்டரில் புகழ்

குக் வித் கோமாளி அஸ்வின்

குக்வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

  • Share this:
டிவி நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி இரண்டு சீசன்களுக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் .நேற்றுடன் இரண்டாவது சீசன் நிறைவடைந்திருக்கும் நிலையில் கனி வெற்றியாளரானார். சமையல் நிகழ்ச்சி என்றாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை மகிழ்வித்ததில்புகழ், ஷிவாங்கி உள்ளிட்ட இந்நிகழ்ச்சியின் கோமாளிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். அதேபோல் ஷிவாங்கி சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பவித்ராவும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் சதீஷூக்கு ஜோடியாக நடித்து திரைப்பட நாயகியாக உள்ளார். அந்த வரிசையில் தற்போது அஸ்வினும் இணைந்துள்ளார்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியைத் தாண்டி இசை ஆல்பங்களில் நடித்து வந்த அஸ்வின், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் படம் காதல் மற்றும் காமெடியை மையப்படுத்தி உருவாகிறது. புகழ் காமெடி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் புகழ் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மே மாதம் இறுதியில் ஷூட்டிங் துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.



இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே சமூகவலைதளத்தில் படம் குறித்த விவரங்கள் கசியத் தொடங்கி விட்டன. இவ்வளவு காலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறியிருப்பதாக அஸ்வின் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: