Cook With Comali: டக்கரான வாய்ப்பை தவற விட்ட ‘குக் வித் கோமாளி’ அஸ்வின்!

அஸ்வின் குமார்

இயக்குநர் கிருத்திகா உதயநிதி கடந்த 2013 ஆம் ஆண்டு ’வணக்கம் சென்னை’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

  • Share this:
    ’குக் வித் கோமாளி’ அஸ்வின் ஒரு அட்டகாசமான பட வாய்ப்பை தவறவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சில வாரங்களுக்கும் முன்பு தான் முடிந்தது. இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாகி வந்த இதில், கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில் போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு குக்குக்கும், கோமாளிக்கும் பெரிய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. இதில் வின்னராக கனியும், ரன்னர்களாக ஷகிலா மற்றும் அஸ்வினும் இடம் பெற்றனர். இந்நிலையில் அஸ்வின் தற்போது ஒரு படத்தை தவறவிட்டிருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன.

    இயக்குநர் கிருத்திகா உதயநிதி கடந்த 2013 ஆம் ஆண்டு ’வணக்கம் சென்னை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதனை அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

    தற்போது தான் மூன்றாவது படம் குறித்த வேலையில் பிஸியாக இருப்பதாக சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதில் நாயகனாக குக் வித் கோமாளி அஸ்வின் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அது வெறும் வதந்தி என்றும், கிருத்திகா உதயநிதியின் அடுத்தப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: