CWC Ashwin: முதல் படத்திலேயே 2 ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் ’குக் வித் கோமாளி’ அஸ்வின்!

குக் வித் கோமாளி அஸ்வின்

முதல் படத்திலேயே தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா என இரண்டு புதுமுக ஹீரோயின்கள் அஸ்வினுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

  • Share this:
    விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ பட பூஜை இன்று சென்னையில் நடந்தது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் அஸ்வின். அடிப்படையில் மாடலான இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் தனது சமையல் திறமையை வெளியுலகிற்கு தெரிவித்தார். குறிப்பாக நிறைய பெண் ரசிகைகளை பெற்றார் அஸ்வின்.

    இதற்கிடையே தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் அஸ்வின். ஏ ஹரிஹரன் இயக்கும் புதிய படத்தில் அஸ்வின் நடிப்பதாக ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டது. மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கவிருந்த இந்தப் படம், COVID-19-ன் இரண்டாவது அலை காரணமாக தாமதமானது. ’என்ன சொல்ல போகிறாய்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார். முதல் படத்திலேயே தேஜூ அஸ்வினி மற்றும் அவந்திகா என இரண்டு புதுமுக ஹீரோயின்கள் அஸ்வினுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்.

    Cook With Comali Ashwin Kumar, Ashwin debut movie, cwc ashwin, குக் வித் கோமாளி, குக் வித் கோமாளி அஸ்வின், அஸ்வின் இன்ஸ்டாகிராம்,  Cook With Comali 2 Ashwin Kumar, Ashwin Instagram, cook with comali ashwin enna solla pogirai, enna solla pogirai ashwin movie, ashwin kumar debut movie, vijay tv cook with comali, அஸ்வின் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம், குக் வித் கோமாளி அஸ்வின் முதல் படம், enna solla pogirai poojai, enna solla pogirai pooja, ashwin kumar cook with comali, enna solla pogirai Teju Ashwini, enna solla pogirai avantika, அவந்திகா, தேஜு அஸ்வினி
    என்ன சொல்ல போகிறாய் பூஜை


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இன்று ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பூஜை நடந்தது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படம், காதல், காமெடி கலந்து உருவாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதி தொடங்கவிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: