ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இயக்குநர்களை அவமதித்தாரா குக் வித் கோமாளி அஸ்வின்?

இயக்குநர்களை அவமதித்தாரா குக் வித் கோமாளி அஸ்வின்?

அஸ்வின்

அஸ்வின்

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் பேசியது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் பேசியது இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களிடம் எதிர் வினைகளை பெற்று வருகிறது.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பேசிய அஸ்வின், ’ரசிகர்களின் அன்பால் தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்பு தான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை.

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையைப் பிரிக்கலாம். விஜய் தொலைக்காட்சி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தரும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப் படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன்.

என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்’ என்றார்.

இதையடுத்து 40 இயக்குநர்களையும், அவர்களது உழைப்பையும் அஸ்வின் அவமதித்து விட்டதாக இயக்குநர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema