Home /News /entertainment /

Ashwin: அஜித்துடன் தொடர்புடைய ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் அறிமுக படம்!

Ashwin: அஜித்துடன் தொடர்புடைய ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் அறிமுக படம்!

குக் வித் கோமாளி அஸ்வின்

குக் வித் கோமாளி அஸ்வின்

இந்த தலைப்பு ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் பிரபலமான பாடலிலிருந்து வந்தது.

    குக் வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் மாதம், ஏ ஹரிஹரன் இயக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் குமார் அறிமுகமாகவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது, இதில் குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார். மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்கவிருந்த இந்தப் படம், COVID-19-ன் இரண்டாவது அலை காரணமாக தாமதமானது. இப்போது, படத்திற்கு ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்த மாதத்திலிருந்து இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    “இந்த தலைப்பு ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் பிரபலமான பாடலிலிருந்து வந்தது. நான் பாடலையும் அதன் வரிகளையும் விரும்புகிறேன். இந்த குறிப்பிட்ட வரி கதைக்கு மிகுந்த பொருத்தத்தைக் கொண்டுள்ளது. இந்த கேள்வி நீங்கள் காதலிப்பவரின் முடிவுக்கு காத்திருக்கும் போது மிகச்சரியாக பொருந்தும். இல்லையா?” என்றார் படத்தின் தலைப்பு குறித்து பேசிய இயக்குநர் ஹரிஹரன்.

    'என்ன சொல்ல போகிறாய்’ படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜி துரைராஜ் எடிட்டிங்கை கையாளுகிறார். விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி