Home /News /entertainment /

பிரபல இயக்குநரை அறிவில்லாதவர் என விமர்சித்த குக் வித் கோமாளி அஸ்வின் - காரணம் இதுதான்

பிரபல இயக்குநரை அறிவில்லாதவர் என விமர்சித்த குக் வித் கோமாளி அஸ்வின் - காரணம் இதுதான்

அஸ்வின் குமார்

அஸ்வின் குமார்

பேரு அஸ்வின் குமார், அவனே ஏகே-ன்னு சொல்லிக்குவான். ஃபோட்டோவுல தூங்குன மாதிரி தான் இருப்பான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    குக் வித் கோமாளி அஸ்வின், இயக்குநர் அறிவழகனை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் அஸ்வின். அடிப்படையில் மாடலான இவர், அந்நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வையாளர்களிடம் பரிச்சயமானார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி டைட்டிலை வென்றார். இரண்டாவது ரன்னரானார் அஸ்வின்.

    அந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, குட்டி பட்டாஸ், அடிப்பொலி உள்ளிட்ட சில ஆல்பம் பாடல்களில் நடித்தார் அஸ்வின். அஸ்வின் குமார் என்ற அவரது பெயரை சுருக்கி ஏகே என குறிப்பிட்டு வந்தார். தமிழ் சினிமாவில் ஏகே என்றால் அனைவருக்கும் அஜித் குமார் தான் நினைவுக்கு வருவார். இதற்கிடையே அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் படம் தோல்வியை தழுவியது. அந்தப் பட விழாவில் அவர் பேசிய தொனி சமூக வலைதளங்களில் பெரிதாக ட்ரோல் செய்யப்பட்டது.

    என் மீது பலருக்கும் வயித்தெரிச்சல்... வைரலாகும் ரவீந்தர் இன்ஸ்டகிராம் பதிவு

    இதற்கிடையே சமீபத்தில் இயக்குநர் அறிவழகனின் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் வெளியானது. இதில் அருண் விஜய், வாணி போஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் ஒரு காட்சியில் தன் மகனுக்கு சினிமா சான்ஸ் கேட்கும் ஒருவர், “இவன் பேரு அஸ்வின் குமார், அவனே ஏகே-ன்னு சொல்லிக்குவான். ஃபோட்டோவுல தூங்குன மாதிரி தான் இருப்பான். ஆனா நேர்ல நல்லாருப்பான்” என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Cook with comali Ashwin criticized director Arivazhagan for trolling him in Tamil Rockerz web series, director arivazhagan upcoming movie, eeram, arivazhagan tamil rockers, tamilrockers director, இயக்குநர் அறிவழகன், ஈரம் அறிவழகன், Cook With Comali Ashwin Kumar, Cook With Comali Ashwin Kumar controversial speech, அஸ்வின் சர்ச்சை பேச்சு, cwc ashwin, குக் வித் கோமாளி அஸ்வின், அஸ்வின் இன்ஸ்டாகிராம், Cook With Comali 2 Ashwin Kumar, Ashwin Instagram,
    அஸ்வின் ஸ்டோரி


    இது குக் வித் கோமாளி அஸ்வினை குறிப்பிடுவதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் ஸ்டோரியில், ”தாங்கள் பிரைன் பியூட்டி கிடையாது. பிரைன் லெஸ் பியூட்டி என்று மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. சாரு ரெவ்யூஸ் பாத்திருப்பாருன்னு நம்புறேன். புரிஞ்சவங்க பிஸ்தா. ஷேம் ஆன் யூ, உங்கள் திறமையை நம்புங்கள் பிரைன் லெஸ் பியூட்டி” என பதிவிட்டிருந்தார். அறிவழகனை தான் மறைமுகமாக பிரைன் பியூட்டி என அஸ்வின் விமர்சித்திருக்கிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி