• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உதவும் நோக்கத்தில் தான் செய்தேன்... லைவ்வில் கதறி அழுத குக் வித் கோமாளி தர்ஷா குப்தா

உதவும் நோக்கத்தில் தான் செய்தேன்... லைவ்வில் கதறி அழுத குக் வித் கோமாளி தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா

நடிகை தர்ஷா குப்தா

நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமுமான தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் லைவ்வில் கதறி அழுதுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கும் புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண் விஜய், சந்தானம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சீரியல் நடிகை தர்ஷா குப்தா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்திரைப்படத்தை திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி இயக்குகிறார்.

‘முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’, உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் சிறிய வியாபாரிகளிடம் புடவை, நகை உள்ளிட்ட பொருட்களை இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்வதற்காக வாங்கிவிட்டு செய்யவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக நேற்று இன்ஸ்டாகிராமில் நேரலை வந்த தர்ஷா குப்தா ஒரு கட்டத்தில் கதறி அழுதார். அவர் லைவ்வில் கூறியதாவது, “நான் எப்போதுமே பாசிட்டிவ் தான். எதிர்மறையான எண்ணங்கள் எனக்கு கிடையாது. ஆனால் என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகள் சமூகவலைதளங்களில் பரவுவதாக பவித்ரா என்னிடம் தெரிவித்தார்.நான் சமீபத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டு அதன் கமெண்ட் பகுதியில் பார்த்த போது விளம்பரம் செய்வதாகக் கூறி பொருட்கள் வாங்கிவிட்டு சரியான நேரத்தில் போஸ்ட் போடவில்லை என்று கூறியிருந்தார்கள். நானாக சென்று எந்த ஒரு பொருளையும் விளம்பரம் செய்கிறேன் என்று சொல்லி வாங்குவதில்லை. அதேபோல் சிறு வியாபாரிகள் கொடுக்கும் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக நான் எந்தவித தொகையும் வாங்குவதில்லை. சிறிய வியாபாரிகள் என்பதால் அவர்களுக்கு உதவுவதற்காகவே நான் எனது இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து வந்தேன்.

எனக்கு அந்தப் பொருட்கள் தேவையில்லாதது தான். பணம் கொடுத்து விளம்பரம் செய்யச் சொன்னால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த சேலையை உடுத்தி தனியாக போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும். எனக்கு அதற்கான நேரமில்லை. அதனால் நான் பணம் பெறுவதில்லை. ஆனால் அடுத்தவர்கள் பணத்தில் பிழைப்பதாக கூறுகிறார்கள். அவர்களை ஏமாற்றுவதாக கூறுகிறார்கள். எனக்கு மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

நான் இன்று அழக்கூடாது என்று தான் நினைத்தேன். உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் இப்போது இருக்கும் நிலையை அடைய நிறைய அவமானங்களை கடந்து வந்திருக்கிறேன். எனவே உண்மையை தெரிந்து கொண்டு பேசுங்கள். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்தால் காயப்படுத்துகிறார்கள்.” இவ்வாறு நடிகை தர்ஷா குப்தா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: