விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சீசன்களைக் காட்டிலும் இந்த சீசனைப் பார்க்கும் மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. 20 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 10 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர்.
அசீம், விக்ரமன், அமுதவாணன், ஷிவின், தனலெக்ஷ்மி, ரச்சிதா, கதிரவன், ஏடிகே, மணிகண்டா, மைனா நந்தினி ஆகியோர் தற்போது வீட்டில் இருக்கின்றனர். இந்த வாரம் தனலெக்ஷ்மி வீட்டிலிருந்து வெளியேறுவார் என்று தகவல் பரவிவருகின்றன.
இந்த வாரம் கனா காணும் காலங்கள் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களாகவும் ஆசிரியர்களாகவும் வேடமணிந்து டாஸ்க்குகளில் பங்கேற்றனர்.
#Vikraman's letter was telecasted in 1hr episode. It was not streamed 24*7 in HOTSTAR. Thank you & Love you All who posted & requested for this to be telecasted JaiBhim! 🔥#Voteforvikraman #AramVellum#VaathiVikraman #vikraman𓃵 #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss6Tamil pic.twitter.com/4Aq6YeRR2l
— siva (@winsiva1994) December 22, 2022
நிகழ்வின்போது ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கடிதம் எழுதி அதனை மற்ற ஹவுஸ்மேட்ஸ் முன்பு வாசிக்க வேண்டும் என்று டாஸ்க் பிக்பாஸ் சார்பில் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தார் குறித்து கடிதம் எழுதி அதனை மற்ற ஹவுஸ்மேட்ஸ் முன்பு படித்தது உருக்கமான நிகழ்வாக இருந்தது. இதில் விக்ரமன் சட்டமேதை அம்பேத்கருக்கு கடிதம் எழுதி அதனை போட்டியாளர்கள் முன்பு படித்தார்.
இதனை 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும்போது காட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அம்பேத்கர் குறித்து பேசியதை ஒளிபரப்ப மறுப்பதா என சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் ஹாட்ஸ் ஸ்டார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் விஜய் டிவியின் 1 மணி நேர ஒளிபரப்பில் அம்பேத்கர் குறித்து விக்ரமன் பேசியது காட்டப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambedkar, Kamal Haasan, Vijay tv