நடிகை மாளவிகா மோகனனுக்கு வெப் சீரிஸ் ஒன்றை பார்க்குமாறு சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பரிந்துரை செய்துள்ளார். அவரது ட்வீட்டிற்கு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
சிவகங்கை மக்களவை தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் கார்த்தி சிதம்பரம். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் ஆவார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு நல்ல படம் அல்லது வெப்சீரிஸை பரிந்துரை செய்யுமாறு பதிவிட்டிருந்தார்.
இதற்கு கார்த்தி சிதம்பரம் Inventing Anna என்ற வெப்சீரிஸை பரிந்துரை செய்திருக்கிறார்.
Inventing Anna
— Karti P Chidambaram (@KartiPC) May 20, 2022
சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியது தொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரம் 2வது குற்றவாளியாக சிபிஐ அதிகாரிகளால் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக சிபிஐயால் குற்றம் சுமத்தப்படும் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு சிபிஐ அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை தவிர்ப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
இந்த விவகாரங்கள் சீரியஸாக சென்று கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், நடிகைக்கு கார்த்தி சிதம்பரம் வெப் சீரிஸை பரிந்துரை செய்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரம் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள், எவ்வளவு பிரச்னை வந்தாலும் அதை கூலாக சமாளிக்கும் திறமை அவருக்கு உண்டு என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Malavika Mohanan