பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை- நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு

பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை- நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு
விஜய்
  • News18
  • Last Updated: September 25, 2019, 2:08 PM IST
  • Share this:
பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை தொடர்பாக நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது

பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. ஆனா விளையாட்டுல அரசியல கொண்டு வராதீங்க என்றார். இதையடுத்து குட்டிக்கதை ஒன்றை சொன்ன விஜய் எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமையை வைத்து முடிவு பண்ணுங்க என்றார். விஜயின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.


இந்நிலையில் பிகில் இசைவெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்த் திரைப்பட உலத்தினரால் இளைய தளபதி என்று அழைக்கப்படுகிற நடிகர் விஜய் அவர்களின் பிகில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியதற்காக தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் கல்லூரி வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு அனுமதி அளித்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் இது ஒரு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

இந்த விழாவில் அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்காக ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் ஆளும் அதிமுகவினருக்கு எதிராக கூறியதாக தவறாக புரிந்து கொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திரைப்பட பாடல் வெளியீட்டு வீழவிற்கு அனுமதி வழங்கியதற்காக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அச்சுறுத்தலுக்கு கல்லூரி நிர்வாகம் இரையாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல. கலைத்துறை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். எனவே இதைவிட ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார் 

 மேலும் நடிகர் விஜய் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்தவர் அல்ல. மாறாக தமிழகத்தில் இருக்கிற லட்சக்கணக்கான இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு போற்றப்படுகிற அற்புதமான ஒரு இளம் கலைஞர். விழாவில் அவரது உரையில் எந்த அரசியல் கட்சியையும் அவர் குறிப்பிட்டு பேசவில்லை. அவர் பொதுவாக பேசியதை ஆளும் அதிமுகவினருக்கு எதிராக பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் கற்பனையாக புரிந்து கொண்டு நடிகர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருகிறார். அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்பது போல் எதைக் கண்டாலும் அஞ்சுகிற நிலையில் அதிமுகவினர் உள்ளனர்.

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளித்ததற்காக தனியார் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழங்கிய நோட்டீசை உடனடியாக திருமபப் பெற வேண்டும். அப்படி திரும்பப் பெறவில்லை எனில் கடும் விளைவுகளை தமிழக ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் Also watch 

First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading