தஞ்சாவூர் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக வனிதா மீது காங்கிரஸ், பாஜகவினர் போலீசில் புகார்

தஞ்சாவூர் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக வனிதா மீது காங்கிரஸ், பாஜகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தஞ்சாவூர் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக வனிதா மீது காங்கிரஸ், பாஜகவினர் போலீசில் புகார்
வனிதா விஜய குமார்
  • Share this:
நடிகை வனிதா சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் தீயாய் பரவியது. அந்த வீடியோவில் ”எங்க ஊர் தஞ்சாவூரில் இரண்டு திருமணங்கள் செய்துகொள்வது இயல்பு. ஏன் என் அப்பா விஜயகுமார் கூட இரண்டு திருமணங்கள் செய்தவர் தான்” என்று தெரிவித்திருப்பார்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த வீட்டில் பார்த்தாலும் அங்கு இரண்டு திருமணம்தான் பன்னிருப்பாங்க. அது தான் அங்க வழக்கம் என்றும் அது தவறு இல்லை என்றும் வனிதா அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

Also read... நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் - சூர்யா தேவி கைது


இந்நிலையில், அனைவரின் வீட்டிலும் இரு மனைவிகள் இருப்பார்கள் என தஞ்சாவூர் மக்களை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதை கண்டித்தும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரளித்த பாஜகவினர்


இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும் நடிகை வனிதாவிற்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தஞ்சை மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆண்களையும், பெண்களையும் தரகுறைவாக விமர்சித்து உள்ளதாகவும், உடனடியாக அவர் இது குறித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

அவர் தெரிவித்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், இல்லை என்றால் அவரை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். அவர் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading