ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டப்பிங் பேசுவதில் வாக்குவாதம்?! யசோதா படக்குழுவோடு சண்டைபோட்டாரா சமந்தா? பரவும் தகவல்

டப்பிங் பேசுவதில் வாக்குவாதம்?! யசோதா படக்குழுவோடு சண்டைபோட்டாரா சமந்தா? பரவும் தகவல்

சமந்தா

சமந்தா

Samantha | புஷ்பா படத்தில் ’ஊ அண்டாவா மாமா’ என்ற பாடலில் தனது பெப்பி டான்ஸ் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சமந்தா. இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சமந்தாவுக்கும் யசோதா படக்குழுவினருக்கு மோதல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .சமந்தா டப்பிங் செய்ய பட குழுவினர் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

  தென்னிந்திய நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.சமந்தா நடித்த யசோதா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் எடுக்கப்பட்டது.இதற்கிடையில் சமந்தா யசோதா படத்திற்கு நான் தான் டப்பிங் செய்வேன் என்று கூறியுள்ளார். இதற்கு முன் நடிகர் திலகம் படத்தின் தெலுங்கு பதிப்பான மகாநதி படத்தில் டப்பிங் செய்து இருந்தார்.ஆனால் அந்த படத்தில் அவரின் குரல் கவனிக்க தக்கதாக இல்லை.

  யசோதா படக்குழுவினர் வேறு யாராவது வைத்து டப்பிங் செய்யலாம் என்று நினைத்தனர்.ஆனால் சமந்தா அதற்கு ஒப்புகொள்ளவில்லை. இதனால் சமந்தாவுக்கும் படக்குழுவினருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.யசோதா படம் வெளிவர தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறுப்படுகிறது. சமந்தாவிற்கு நிறைய படங்களில் பாடகி சின்மயி தான் டப்பிங் செய்துள்ளார்.இந்த ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளில் யசோதா படம் வெளியாகும் என்று முன்னர் கூறப்பட்டு இருந்தது.

  Read More: துணிவு ஷூட்டிங் : அது அஜித் சாரா? சென்னையில் குவிந்த கூட்டம்... ஆனா நடந்த கதை வேறு!

   சமந்தா பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. புஷ்பா படத்தில் ’ஊ அண்டாவா மாமா’ என்ற பாடலில் தனது பெப்பி டான்ஸ் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சமந்தா. இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

  சமந்தா ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சமந்தா சிகிச்சை பெறுவதற்காக ‘குஷி’ படத்தின் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
   
  View this post on Instagram

   

  A post shared by Samantha (@samantharuthprabhuoffl)  நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்த பல வதந்திகள் வந்து கொண்டு இருந்தது.வதந்திக்கு அவரது மேனேஜர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.நடிகை சமந்தா அரிதான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால், அவை அனைத்தும் வெறும் வதந்திகள் என்றும், அதில் உண்மையில்லை என்றும் சமந்தாவின் குழு தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

  சமந்தா ரூத் பிரபுவின் அடுத்தப் படம் சாகுந்தலம் டோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். குணா டீம்வொர்க்ஸுடன் இணைந்து தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை குணசேகர் எழுதி இயக்கியுள்ளார். இதையடுத்து சாகுந்தலம் திரைப்படம் நவம்பர் 4, அன்று வெளியாக உள்ளது.

  Read more: ஆந்திராவில் தொடங்கும் சீயான் 61 பட ஷூட்.. தீபாவளிக்கு வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!?

  சமந்தா கடைசியாக தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actress Samantha