Home /News /entertainment /

வலிமை இந்தி போஸ்டர் - வதந்திகளை பொய்யாக்கிய போனி கபூர்!

வலிமை இந்தி போஸ்டர் - வதந்திகளை பொய்யாக்கிய போனி கபூர்!

வலிமை

வலிமை

வலிமை தள்ளிப்போகும் என்பது இந்த நொடிவரை உண்மையில்லை என்று உறுதிபட வலிமை படக்குழுவும் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
வலிமை படத்தின் இந்தி போஸ்டரை வெளியிட்டு வதந்திகளுக்கு விடை கொடுத்திருக்கிறார் போனி கபூர்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வையைத் தொடர்ந்து அவரது வலிமை படத்தையும் தயாரித்துள்ளார் போனி கபூர். 2021 தீபாவளிக்கு வலிமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகாது, 2022 பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் அறிவித்தார். அதன்படி ஜனவரி 13 படம் திரைக்கு வருகிறது.

ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அறிவித்துள்ளன. இதன் காரணமாக ஜனவரி 7 வெளியாவதாக இருந்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக குறைத்ததும் ஆர்ஆர்ஆர் தள்ளிப்போக ஒரு காரணம்.



வலிமை படமும் அதேபோல் தள்ளிப் போவதாக இரு தினங்களாக இணையத்தில் பலரும் செய்தி வெளியிட்டு வருகின்றனர். அதனை மறுக்கும்விதமாக தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று காலை அஜித்தின் பைக் சண்டைக் காட்சிகளைக் கொண்ட வலிமை கிளிப்பிங்ஸை  வெளியிட்டார்.



Also read... காஸ்ட்லி வில்லனாக மாறிய எஸ்.ஜே.சூர்யா...!

Also read... தமிழ் சினிமாவில் கருத்தியல், வணிகம் இரண்டிலும் வென்ற ஒரே படம் 'ஜெய் பீம்' - கே.பாலகிருஷ்ணன்!

அதில் ஜனவரி 13 படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவதாக குறிப்பிட்டிருந்தார். நேற்றிரவு வலிமை படத்தின் இந்தி போஸ்டரை வெளியிட்டு ஜனவரி 13 படம் வெளியாவதை மறுபடியும் உறுதி செய்துள்ளார். வலிமை தள்ளிப்போகும் என்பது இந்த நொடிவரை உண்மையில்லை என்று உறுதிபட வலிமை படக்குழுவும் தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith, Boney Kapoor, Valimai

அடுத்த செய்தி