முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Meera Mithun | நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

Meera Mithun | நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

மீரா மிதுன்

மீரா மிதுன்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகை மீரா மிதுன்,  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த மாதம் 14 ம் தேதி  கைது செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

Also Read  : பயத்தில் ஓடிய கண்ணான கண்ணே சீரியல் நடிகை நிமிஷிகா - வைரல் வீடியோ!

இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் கோவிட் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டுள்ளதால் தங்களுக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையேற்ற நீதிபதி, மீராமிதுன் மற்றும் அவரது நண்பருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Meera Mithun, News On Instagram