ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘இரவு 12 மணிக்கு போனில் அழைத்து பாடினார் கமல்’ – அன்பே சிவம் பாடல் உருவான விதத்தை பகிரும் வித்யாசாகர்

‘இரவு 12 மணிக்கு போனில் அழைத்து பாடினார் கமல்’ – அன்பே சிவம் பாடல் உருவான விதத்தை பகிரும் வித்யாசாகர்

வித்யாசாகர் - கமல்

வித்யாசாகர் - கமல்

அஜித், விஜய் படங்களுக்கு நான் இசையமைக்கும்போது, பாடல்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் டிமாண்ட் செய்தது கிடையாது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்டோர் படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். அவர், அன்பே சிவம் படத்தில் டைட்டில் சாங் உருவான விதம் குறித்து பேட்டி ஒன்றில் விவரித்திருந்தார்.

  வித்யாசாகர் அந்த பேட்டியில் கூறியதாவது- 2001 இல் இருந்து 2005 வரை 60 படங்களுக்கு இசையமைத்தேன். நான் உச்ச கட்டத்தில் இருந்த காலம் என்று இதனை கூறலாம். இந்த காலகட்டத்தில், நான் இசையமைத்த படங்களை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். எல்லாவற்றையும் விட அவர்களுடைய பாராட்டுதான் நமக்கு முக்கியமானது.

  தனிப்பட்ட முறையில் ஒரு அறையில் உட்கார்ந்து ஒரு பாட்டை கம்போஸ் செய்கிறேன். அதை கோடிக்கணக்கான மக்கள் கேட்டு அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம். இது கடவுளின் பெரிய செயலாக கருதுகிறேன்.

  ''தர்மத்தின் பாதுகாவலர்.. இந்து மதத்தை பாதுகாக்கும் பேரரசு'' கைலாசாவில் இருந்து விருது அறிவித்த நித்தியானந்தா!

  அஜித், விஜய் படங்களுக்கு நான் இசையமைக்கும்போது, பாடல்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் டிமாண்ட் செய்தது கிடையாது. தில், தூள், கில்லி, அன்பே சிவம், சந்திரமுகி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

  அன்பே சிவம் படத்தில் ‘யார் யார் சிவம்’ என்ற பாடலை கமல் தான் பாட வேண்டுமென்று நாங்கள் சேர்ந்து முடிவு எடுத்தோம். இது படத்துடைய மெயின் தீம் பாடல். இந்த பாடல் எப்படி அமைய வேண்டும் என்று சில நாட்கள் பேசிக்கொண்டே இருந்தோம்.

  தடுமாற்றத்தில் சிவகார்த்திகேயனின் மாஸ் ஹீரோ இமேஜ்

  இந்தப் பாடல் மிகவும் சிம்பிளாக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அந்தப் பாடலுக்கான ட்யூன் திடீரென்றுதான் உதித்தது. பின்னர் கமல் சாரிடம், ‘சார் பாடல் இப்படி இருக்கலாமா’ என்று கேட்டேன். அவர் ஒரு செகண்ட் யோசித்துவிட்டு, ‘வச்சுக்குவோம். நல்லா இருக்கு’ என்று சொல்லி விட்டார்.

  பாடல் எழுதி வந்த பின்னர் சின்ன குழந்தை போல் இரவு 12 மணிக்கு என்னை போனில் கமல் சார் அழைத்தார். ‘சார் அந்த பாடல் வைரமுத்து எழுதி வந்திருக்கிறது. இப்ப பாருங்க நான் பாடுறேன்’ அப்படி சொல்லிவிட்டு, யார் யார் சிவம் என்று பூரிப்புடன் பாடினார். என்னால் இதை மறக்க முடியாது. இதே போன்று அன்பே சிவம் படத்தின் பின்னணி இசை, என்னுடைய மிகச் சிறந்த பின்னணி இசைகளில் ஒன்று.இவ்வாறு வித்யாசாகர் தெரிவித்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kamal Haasan, Kollywood