D Imman: மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு வாய்ப்பளித்த டி.இமான்! - ரசிகர்கள் பாராட்டு

டி.இமான்

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாடுவதற்கு வாய்ப்பளித்த இமானை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

  • Share this:
    மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    திறமைகளை ஊக்குவிப்பதில் இசையமைப்பாளர் டி.இமான் என்றுமே முதன்மையானவர். சிறந்த குரல்வளம், பாடும் திறன் உள்ள பலரை தன் படங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் 40-வது படம், விஜய் சேதுபதியின் லாபம், அரவிந்த் சாமியின் வணங்காமுடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல், மை டியர் பூதம் போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு, தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார் டி.இமான். அவருடன் இணைந்து சஹானா என்ற சிறுமியும் அப்பாடலை பாடியுள்ளார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் தான் அவர்கள் பாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாடுவதற்கு வாய்ப்பளித்த இமானை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். முன்னதாக திருமூர்த்தி என்கிற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு தனது இசையில் வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட இமான், வாய்ப்பளித்தது குறிப்பிடத் தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: