Home /News /entertainment /

கோப்ரா படத்தின் அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்… போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பு

கோப்ரா படத்தின் அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்… போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பு

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

ஆகஸ்ட் 31-ஆம் தேதி கோப்ரா படத்தை வெளியிடும் நோக்கில் படக்குழுவினர் போஸ்ட் புரொடக்சன் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படம் குறித்த அப்டேட்டை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார். இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் கருதப்படுகிறது.

    இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த மாதம் 13ஆம் தேதி சென்னையில், கோப்ரா படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது.

    பூப் போல மனசு ஏறாத வயசு... ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்

    செவன் ஸ்க்ரீன் நிறுவனம் சார்பாக லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கோப்ரா படம் வெளியாக உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கோப்ரா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாகிறார்.

    கமலின் விக்ரமை தொடர்ந்து மம்மூட்டி படத்தில் ஏஜெண்ட் டீனா!

    துருக்கி நாட்டைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி என்ற கேரக்டரில் இர்பான் பதான் நடித்திருக்கிறார். கோப்ராவில் சுமார் 20 கெட் அப்புகளில் விக்ரம் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    படத்தின் ரீ ரிக்கார்டிங் மற்றும் சில கிராபிக்ஸ் வேலைகள் நடைபெறுவதால் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. முன்னதாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வேலைகள் முடியாத காரணத்தால் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 31-ஆம் தேதி கோப்ரா படத்தை வெளியிடும் நோக்கில் படக்குழுவினர் போஸ்ட் புரொடக்சன் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில் கோப்ரா படத்தின் ரீ ரிக்கார்டிங் வேலைகள் நடைபெற்று வருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அப்டேட் கொடுத்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் தற்போது அமெரிக்காவில் இசைப் பயணத்தில் இருக்கிறார். இந்தநிலையில் கோப்ரா படம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அப்டேட் விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vikram, Cobra Movie

    அடுத்த செய்தி