‘குயின்’ வெப் சீரிஸ்க்கு புதிய சிக்கல் - தேர்தல் ஆணையத்தில் புகார் மனு

‘குயின்’ வெப் சீரிஸ்க்கு புதிய சிக்கல் - தேர்தல் ஆணையத்தில் புகார் மனு
ரம்யா கிருஷ்ணன்
  • Share this:
உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற இந்த நேரத்தில் ‘குயின்’ வெப் சீரிஸை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாறன் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எம்.எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து வரும் 14-ம் தேதி முதல் இத்தொடர் ஒளிபரப்பாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையோ, குயின் தொடரையோ தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என்றும் விதிக்க கோரியும் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ. தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கவுதம் மேனன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக ஜோசப் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற இந்த நேரத்தில் குயின் தொடரை வெளியிட்டால் தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே இத்தொடருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see:
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்