• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மோகன் ஜி-யின் ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்

மோகன் ஜி-யின் ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்

ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்

கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குநர் மோகன் ஜி பதிவு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  • Share this:
    ருத்ர தாண்டவம் படத்துக்கு தடைகோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சர்ச்சைகளைக் கிளப்பிய திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தற்போது ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் கெளதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திரெளபதி படத்தைப் போன்று, ருத்ர தாண்டவம் படத்திற்கும் எதிர்ப்பு குரல்களும் எழுகின்றன. இந்நிலையில், தற்போது ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள்நல கட்சியினர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குநர் மோகன் ஜி பதிவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்வதோடு, இயக்குநர் மோகன் ஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: