Home /News /entertainment /

தனுஷின் தாய் கிழவி பாடல் மீது எழுந்த புகார் - வரிகளை மாற்ற வலியுறுத்தல்

தனுஷின் தாய் கிழவி பாடல் மீது எழுந்த புகார் - வரிகளை மாற்ற வலியுறுத்தல்

தனுஷ்

தனுஷ்

சமூக ஆர்வலர் ஒருவர், பாடலின் சில வார்த்தைகள் பெரியவர்களை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளதாக புகார் அளித்துள்ளார்.

    தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள தாய் கிழவி பாடல் மீது புகார் எழுந்துள்ளது.

    நடிகர் தனுஷ் அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் சிங்கிளான தாய் கிழவி பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

    சமீபத்திய தகவல் என்னவென்றால், 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் பாடிய 'தாய் கிழவி' பாடல், அதன் வரிகளால் சிக்கலைச் சந்தித்துள்ளது. 'தாய் கிழவி' பாடலை தனுஷே எழுதி பாடியுள்ளார். பாடலின் வரிகள் வேடிக்கையாக இருந்தாலும், சமூக ஆர்வலர் ஒருவர், பாடலின் சில வார்த்தைகள் பெரியவர்களை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளதாக புகார் அளித்துள்ளார். எனவே, பாடலின் சில வரிகளை மாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    விருதுநகர் சிறையில் குக் வித் கோமாளி புகழ் - வெளியான வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தனுஷ் மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் காம்போ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 'திருச்சிற்றம்பலம்' படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் பாடல் வீடியோ யூ-ட்யூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அவர்களின் கதாபாத்திரங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி