ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் ஷக்தி சிதம்பரம் போலீசில் புகார்

இணையதளவாசிகளுக்கு நன்கு அறிமுகமான பெயர் ப்ளூ சட்டை மாறன். புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் படத்தின் மீதான தனது விமர்சனத்தை யூடியூப் தளத்தில் பதிவிடுவார்.

ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் ஷக்தி சிதம்பரம் போலீசில் புகார்
ப்ளூ சட்டை மாறன்
  • News18
  • Last Updated: January 28, 2019, 9:29 PM IST
  • Share this:
சார்லி சாப்ளின் 2 படத்தை மோசமாக விமர்சித்ததாக கூறி ப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இணையதளவாசிகளுக்கு நன்கு அறிமுகமான பெயர் ப்ளூ சட்டை மாறன். புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் படத்தின் மீதான தனது விமர்சனத்தை யூடியூப் தளத்தில் பதிவிடுவார். இவரது விமர்சனத்துக்காக லட்சக்கணக்கானோர் காத்திருப்பது வாடிக்கையானது. 8.15 லட்சம் பார்வையாளர்களை கொண்டது இவரது யூடியூப் தளம் என்பதால், அவரது விமர்சனம் படத்தின் மீது தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. படங்களின் மீது பாமர மொழியில் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது இவரது பாணி.
தற்போது பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தை மோசமாக விமர்சித்ததாக கூறி ப்ளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில், ‘ஷக்தி சிதம்பரமாகிய நான் 25 ஆண்டுகளாக பல்வேறு வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் தமிழ்த்துறையில் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறேன். என்னுடய இயக்கத்தில் கடந்த 26-ம் தேதி வெளியான சார்லி சாப்ளின் படத்தை மிகக் தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் ‘பிளு சட்டை மாறனிடம் அலைபேசியில், ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை உள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர் உட்பட படத்தின் ஒட்டு மொத்த குழுவையும் ஒருமையில் கேவலமாக பேசியதையும் கடும் சொற்களை உபயோகப்படுத்தியதையும் வாபஸ் பெற வேண்டும் என்று நாகரிகமாக கேட்டேன். ஆனால் அவர் இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறேன். எனக்கு லாபம் கிடைக்க என்ன வேணும்னாலும் பண்ணுவேன் உன்னால் முடிஞ்சா பாத்துக்கோ என மோசமான வார்த்தைகளில் பேசினார். மேலும் என்னை காலிபண்ணிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.அவருடைய தமிழ் டாக்கீஸை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தனது புகாரில் ஷக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Also watch

First published: January 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading