திரை பிரபலங்களின் திருமண விழாக்களை வியாபாரமாக்கும் யுக்தி தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்வை ஹாட்ஸ்டார் ஓ.டி.டி நிறுவனம் வரும் பத்தாம் தேதி வெளியிடுகிறது.
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள் தங்களுடைய திருமண விழாக்களை கோடிகளை கொட்டும் வியாபாரமாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இணையினர் தங்களுடைய, திருமண விழாவின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர். அதுவும் 25 கோடி ரூபாய்க்கு அதன் உரிமை சென்றதாக கூறப்பட்டது.
நயன் - விக்கி திருமண நிகழ்வின் வியாபாரம் பல பிரபலங்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதன் விளைவாக ஆதி - நிக்கி கல்ராணி ஆகியோரின் திருமண உரிமையும் பெரும் தொகைக்கு விற்பனையானது.
இதேபோல் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகை ஹன்சிகா, தன்னுடைய திருமண நிகழ்வின் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்தார்.
பிரபலங்களின் திருமண நிகழ்வு விற்பனை செய்யப்படுவதால், அதற்காக சில பிரத்தேக நிகழ்வுகளும் அரங்கேற்றப்படுகின்றன. இதனால் அந்த நிகழ்வு 4 அல்லது 5 நாட்கள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பிரபலங்களின் வாழ்க்கை பயணம் குறித்தும் பதியப்படுகின்றன.
ஹன்சிகா திருமணத்தின் உரிமையை கைபற்றிய ஹாட் ஸ்டார் நிறுவனம், Hanshika's Love Shaadi Drama என்ற தலைப்பில் வரும் 10-ம் தேதி வெளியிடுகின்றனர்.
ஓ.டி.டி நிறுவனங்களின் வருகைதான் இதுபோன்ற வியாபாரத்திற்கு காரணம். அவர்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள புதிய திரைப்படங்கள், இணையத் தொடர்கள் தாண்டி இது போன்ற சில வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஓ.டி.டி நிறுவனங்களுக்கு தேவைப்படுகின்றன. அதை பிரபலங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
பிரபலமில்லாத சாமானியர்கள் தங்கள் திருமணத்திற்காக பல லட்சம் கடன் வாங்கும் சூழல் உள்ளது. ஆனால் இன்றைய சூழலில் திரை பிரபலங்கள் தங்களின் திருமண நிகழ்வை வியபாரமாக்கி பல கோடிகள் சம்பாதிக்கின்றார்கள். அதற்காக ஒரு வியாபாரம் உருவாகி வருகிறது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Hansika