விஸ்வாசம் பட நடிகை மதுமிதாவுக்கு திருமணம்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா

news18
Updated: February 13, 2019, 8:01 PM IST
விஸ்வாசம் பட நடிகை மதுமிதாவுக்கு திருமணம்
நடிகை மதுமிதா
news18
Updated: February 13, 2019, 8:01 PM IST
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த மதுமிதாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா. அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில் தனது தாய்மாமாவின் மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலை பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் செய்கிறார். இவர்களது திருமணம் கோயம்பேட்டில் மிகவும் எளிய முறையில் நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு பின்னரும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ள மதுமிதா தனது கணவர் இயக்கும் முதல் படம் தான் எங்களது முதல் குழந்தை என்றும் தெரிவித்துள்ளார்.

மதுமிதா - மோசஸ் ஜோயல் குடும்பத்துக்கிடையே 18 ஆண்டுகள் பகை இருந்துள்ளது. இந்த திருமணத்தின் மூலம் இருகுடும்பத்தாரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? - சினிமா செய்திகள் வீடியோ

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...