பிரசாந்த் நடிப்பில் அவர் தந்தை இயக்கிய அந்தகன் படத்தின் டப்பிங் பணிகளை நகைச்சுவை நடிகர் யோகிபாபு முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற முன்னணி நடிகர்கள் பலர் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்த ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.
பாலிவுட்டில் வெளியான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள அந்தகன் திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபு அவரது டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.
மோகன் ராஜா இயக்குவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பிரஷாந்த்தின் தந்தையான தியாகராஜன் இயக்கியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.