ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனைவியை காணவில்லை என காமெடி நடிகர் புகார்... சடலமாக கண்டறிந்த போலீசார்

மனைவியை காணவில்லை என காமெடி நடிகர் புகார்... சடலமாக கண்டறிந்த போலீசார்

ஆஷா - உல்லாஸ் பந்தளம்

ஆஷா - உல்லாஸ் பந்தளம்

நடிகர் உல்லாஸ் பந்தளத்திற்கும் தனது மகளுக்கும் இடையில் குடும்பப் பிரச்சினை எதுவும் இல்லை என உயிரிழந்த பெண்ணின் தந்தை சிவானந்தன் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நகைச்சுவை நடிகர் ஒருவர் தனது 38 வயது மனைவி காணாமல் போனதாக அளித்த புகாரை விசாரித்து வந்த போலீசார், அந்தப் பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.

இந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலையாள நடிகர் உல்லாஸ் பந்தளம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது மனைவி ஆஷாவை காணவில்லை என போலீசில் புகார் செய்தார்.

உல்லாஸின் மனைவி ஆஷா, பந்தளம், பூழிக்காட்டில் உள்ள அவர்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆஷாவும் குழந்தைகளும் இரவில் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். சம்பவம் நடந்த போது உல்லாஸ் வீட்டில் இருந்துள்ளார். இப்போது இது தற்கொலை என தெரியவந்துள்ளது. முதலில் வீட்டில் தேடுவதற்குப் பதிலாக, மனைவியைக் காணவில்லை என கணவர் கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக மேற்படி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

நடிகர் உல்லாஸ் பந்தளத்திற்கும் தனது மகளுக்கும் இடையில் குடும்பப் பிரச்சினை எதுவும் இல்லை என உயிரிழந்த பெண்ணின் தந்தை சிவானந்தன் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மன உளைச்சல் காரணமாக தனது மகள் ஆஷா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். தனது மருமகன் உல்லாஸ் மீது தமக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ எந்த புகாரும் இல்லை என்றும், எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெளிவுப்படுத்தினார். சமீபத்தில் தான் உல்லாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் Soul Of Varisu வெளியீடு!

ஆஷாவின் உடல் அடூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார். உல்லாஸ் பந்தளம் மற்றும் அவரது பிள்ளைகள் நிலைகுலைந்த நிலையில், இந்த சம்பவம் மாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Malayalam actor