Nellai Siva: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் நெல்லை சிவா மரணம்

நெல்லை சிவா

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூர்த்தியின் மாமாவாக நடித்து வந்தார்.

  • Share this:
    நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

    80-களில் தொடங்கி தற்போது வரை குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் நெல்லை சிவா. நெல்லை வட்டார வழக்கில் இயல்பாக பேசுவது அவருடைய ஸ்பெஷல்.

    வடிவேலுவின் ’கிணத்தை காணோம்’ என்ற காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து, வடிவேலு சொல்லும் காரணங்களால் இந்த வேலையே எனக்கு வேண்டாம் என உதறிவிட்டு செல்வார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மூர்த்தியின் மாமாவாக நடித்து வந்தார்.

    இந்நிலையில் நெல்லை சிவா இன்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது இறுதி சடங்குகள் நெல்லை மாவட்டம் பணகுடியில் நாளை நடைபெற உள்ளது. சிவாவின் மரணம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. சமீபமாக எஸ்.பி.ஜனநாதன், விவேக், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் மரணமடைந்த நிலையில் தற்போது நெல்லை சிவா மரணம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: