டிக்-டாக் புகழ் சூர்யா தேவி கொடுத்த புகாரில் நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை வனிதாவின் 3-வது திருமணத்தை விமர்சித்து பேசியதில் தொடங்கிய சூர்யாதேவி -நாஞ்சில் விஜயன் சண்டை தற்போது கைதில் முடிந்துள்ளது.சிரிச்சா போச்சு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் இவர் மிகவும் பிரபலம். நாஞ்சில் விஜயன் தான் நடத்தி வந்த யூடியூப் சேனலில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.
இவருடன் சேர்ந்து டிக்-டாக் புகழ் சூர்யா தேவியும் வனிதாவை அவதூறாக பேசி வந்தார். வனிதாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த சூர்யா தேவி தான் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியதாக நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
Read More : ஐஜி பெயரை சொல்லி ரூ.4.50 லட்சம் மோசடி..! கையும் களவுமாக பிடிப்பட்ட ஆசாமி..!
இதனை தொடர்ந்து சூர்யா தேவி மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். நடிகை வனிதாவிற்கு எதிராக யூ டியூப்பில் கருத்து பதிவிட்டபோது தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் விஜயன் திடீரென வனிதாவுடன் சமரசம் செய்து கொண்டார் என குற்றம் சாட்டினார் சூர்யா தேவி. இதுபற்றி கேட்பதற்காக நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சென்றபோது என்னை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
இதில் எனது மண்டை உடைந்தது என்று சூர்யா தேவி புகாரளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் விஜயன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதில் பல்வேறு சம்மன்கள் அனுப்பிய நிலையிலும் நாஞ்சில் விஜயன் முறையாக விசாரணைக்கு ஆஜராகாததால் சனிக்கிழமை அவரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து நாஞ்சில் விஜயனிடம் விசாரணை நடத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Entertainment