Home /News /entertainment /

வில்லனாக களம் இறங்கும் காமெடி நடிகர் மதன் பாப்!

வில்லனாக களம் இறங்கும் காமெடி நடிகர் மதன் பாப்!

மதன் பாப்

மதன் பாப்

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து கனடா சென்றவர், அங்கேயே 3 ஆண்டுகள் தங்கி விட்டாராம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் மதன் பாப் தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிப்பதாக தெரிவித்துள்ளார். 

    1984-ஆம் ஆண்டு பாலு மகேந்திராவின் நீங்கள் கேட்டவை படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனவர் மதன் பாப். அதன் பின்னர் வானமே எல்லை, தேவர் மகன், ஹான்ஸ்ட் ராஜ், திருடா திருடா, பூவே உனக்காக என பல தமிழ் படங்களில் நடித்தார்.

    சமீபத்தில் அவரை எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை. காரணம், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து கனடா சென்றவர், அங்கேயே 3 ஆண்டுகள் தங்கி விட்டாராம். தற்போது நஷ்டத்தை சரிக்கட்டி கடனை அடைத்தவர், மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார். அதோடு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

    நாட்டை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

    இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அசோசியேட் பொன்குமார் இயக்கும் படத்தில் நடிக்கும் மதன் பாப், கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். அதில், யோகிபாபுவுடன் காண்டிராக்டர் நேசமணி, சந்தானம், சரத்குமார், ஜி.வி.பிரகாஷ், பிரபுதேவா, வடிவேல், டைரக்டர் விக்ரமன் மகன் கதாநாயகனாக நடிக்கும் படம் உள்ளிட்டவைகள் அடங்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவை தவிர தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்கும் மதன் பாப், கன்னட படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி