King Kong: மகன் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த காமெடி நடிகர் கிங் காங்!

கிங் காங்

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

  • Share this:
    தனது மகன் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் நடிகர் கிங் காங்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்திருப்பவர் கிங் காங். இவரது உண்மையான பெயர் ‘சங்கர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளி வந்து வெற்றிப்பெற்ற ‘அதிசய பிறவி’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் கிங் காங். கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.



    தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று கிங் காங்கின் மகன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதனால் அவரது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட கிங் காங், ”என் மகன் துரைமுருகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: