Home /News /entertainment /

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காமெடி நடிகர் திடீர் மரணம்

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காமெடி நடிகர் திடீர் மரணம்

தீபேஷ் பன்

தீபேஷ் பன்

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு தான் தீபேஷின் மறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    பிரபல இந்தி காமெடி நடிகர் தீபேஷ் பன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    41 வயதான நடிகர் தீபேஷ் பன், 'பாபிஜி கர் பர் ஹெய்ன்' என்ற இந்தி சீரியலில் மல்கான் சிங்காக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவர் கடந்த ஜூலை 23-ஆம் தேதி காலை தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, பேட்ஸ்மேன் அடித்த பந்தை எடுக்க குனியும் போது, தவறுதலாக கீழே விழுந்து தலையில் அடிப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து தீபேஷ் சுயநினைவின்றி போனதும், ​​அவரது நண்பர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு தான் தீபேஷின் மறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நடிகர் தீபேஷுக்கு திருமணமாகி 3 வருடமே ஆகிறது. அதோடு அவருக்கு பதினெட்டு மாத குழந்தையும் உள்ளது.

    நயன்தாரா பெரிய நடிகையா? சர்ச்சைக்குள்ளாகும் பாலிவுட் பிரபலத்தின் கருத்து

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தீபேஷின் மரணத்தையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்து, தங்கள் வருத்தத்தை தெரியப்படுத்தினர்.
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி