Election 2021: பிரபல நகைச்சுவை நடிகர்-இயக்குநர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி

Election 2021: பிரபல நகைச்சுவை நடிகர்-இயக்குநர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி

அதிமுக அலுவலகம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ஜில்லா, மனம் கொத்தி பறவை, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் ரவி மரியா.

  • Share this:
    பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ரவி மரியா வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    ஆசை ஆசையாய், மிளகா போன்ற திரைப்படங்களை இயக்கிய ரவி மரியா, பின்னர் மாயாண்டி குடும்பத்தார், தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ஜில்லா, மனம் கொத்தி பறவை, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக இரண்டாம் குத்து படத்தில் டாக்டர் தம்பி துரையாக நடித்திருந்தார்.

    comedy actor and director Ravi Maria contest in Tamil Nadu assembly election behalf of AIADMK
    ரவி மரியா


    இந்நிலையில் வரும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார் ரவி மரியா. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு ரவி மரியா விருப்ப மனுவை தாக்கல் செய்யும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: