Thalapathy 65: நான்காவது முறையாக விஜய்யுடன் இணையும் யோகிபாபு?

Thalapathy 65: நான்காவது முறையாக விஜய்யுடன் இணையும் யோகிபாபு?

விஜய் - யோகி பாபு

மெர்சல், சர்கார், பிகில் ஆகியப் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய்யுடன் யோகிபாபு இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    மெர்சல், சர்கார், பிகில் ஆகியப் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய்யுடன் யோகிபாபு இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் இந்தப் படத்தை 'தளபதி 65' என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில், 'மெர்சல்,' சர்கார்' மற்றும் 'பிகில்' ஆகியப் படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக விஜய்யுடன் திரையைப் பகிர்ந்துக் கொள்கிறார் யோகி பாபு. தளபதி 65 படத்தின் அறிவிப்பு வீடியோவில் காட்டப்பட்டுள்ள துப்பாக்கிகள் மற்றும் வேகமான கார்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த படம் ஒரு அதிரடி பொழுதுபோக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தற்போது சிவா இயக்கும் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தை இந்நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. 'தளபதி 65' படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் இரட்டையர் அன்பறிவ் இந்த படத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: