முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சமூக விழிப்புணர்வு படத்தில் நடன இயக்குனர் தினேஷுடன் இணைந்து நடிக்கும் யோகி பாபு

சமூக விழிப்புணர்வு படத்தில் நடன இயக்குனர் தினேஷுடன் இணைந்து நடிக்கும் யோகி பாபு

லோக்கல் சரக்கு

லோக்கல் சரக்கு

நடன இயக்குனர் தினேஷுடன் இணைந்து லோக்கல் சரக்கு என்ற படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். அதில் மது பழக்கத்திற்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகளை சமூக கருத்து மற்றும்  நகைச்சுவையுடன் படமாக்கியுள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் சிறுவர்களும் குடிபழக்கத்திற்கு அடிமையாகும் நிலையில், அதனால் ஏற்படும் பிரச்னைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள லோக்கல் சரக்கு என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடன இயக்குனர் தினேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, ஒரு புறம் நாயகனாகவும் நடித்த வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இதைத்தொடர்ந்து அவர் பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார், அதே போல் நடித்துக் கொண்டும் இருக்கிறார். இந்த நிலையில் நடன இயக்குனர் தினேஷுடன் இணைந்து லோக்கல் சரக்கு என்ற படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

Also read... திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய நடிகர் தனுஷ்

அதில் மது பழக்கத்திற்கு அடிமையாவதால் ஏற்படும் பாதிப்புகளை சமூக கருத்து மற்றும்  நகைச்சுவையுடன் படமாக்கியுள்ளனர்.  அந்த திரைப்படத்தை வடிவேலுவிற்கு நகைச்சுவை ட்ராக் எழுதிய எஸ்.பி. ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான சுறா திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை.

இதன் காரணமாக தற்போது நகைச்சுவை கதையை திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.  லோக்கல் சரக்கு திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இறுதி கட்டப் பணிகளை முடித்து அடுத்த மாதம் படத்தை வெளியிட பட குழு திட்டமிட்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Yogibabu, Entertainment