Home /News /entertainment /

சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு!

சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு!

தடை உடை படப்பிடிப்பு தளத்தில்

தடை உடை படப்பிடிப்பு தளத்தில்

இந்தப் படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    காமெடி நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு சினிமாவில் அறிமுகமாகிறார்.

    நடிகர் பாபி சிம்ஹா, கடைசியாக விக்ரமுடன் இணைந்து ‘மஹான்’ படத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் என்.எஸ்.ராகேஷ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘தடை உடை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது.

    இந்தப் படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுவாரஸ்யமாக, அவரது மகன் மணிகண்ட பிரபுவும் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

    செந்தில் மற்றும் அவரது மகன் மணிகண்ட பிரபுவின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்த பாபி சிம்ஹா, "லெஜெண்ட் நடிகர் செந்தில் சார் அவர்களை வரவேற்கிறோம். மணிகண்ட பிரபு தடை உடை படத்தில் இணைந்துள்ளார். உண்மையான அப்பாவும் மகனும் ரீல் அப்பா மற்றும் மகனாக நடிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காப்பியடிக்கப்பட்டதா வாரிசு ஃபர்ஸ்ட் லுக்? உண்மையை உடைத்த ஓட்டோ நிறுவனம்



    ரேஷ்மி சிம்ஹா தயாரிக்கும் இந்தப் படத்தில், மிஷா நரங், பிரபு, ரோகினி ஆகியோரும் நடித்துள்ளனர். செந்தில் மற்றும் அவரது மகன் மணிகண்ட பிரபு இருவரும் அப்பா மகனாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Senthil, Tamil Cinema

    அடுத்த செய்தி