Home /News /entertainment /

பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

ராஜு ஸ்ரீவஸ்தவா

ராஜு ஸ்ரீவஸ்தவா

ராஜு ஸ்ரீவஸ்தவா கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டிரெட்மில்லில் ஓடும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

    பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா. ஸ்டாண்ட் அப் காமெடியனாக வாழ்க்கையை தொடங்கிய அவர், பின்னர் இந்தி படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். பின்னர் பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்தார். அதோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளார்.

    ராஜு ஸ்ரீவஸ்தவா கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி டிரெட்மில்லில் ஓடும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்போது அவரது மனைவி அவரின் தலையைத் தொட்டபோது கால்களில் சிறிது அசைவு ஏற்பட்டதைத் தவிர, வேறெந்த அசைவும் இல்லாமல் இருந்தார். உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் சுயநினைவின்றி இருந்தார்.

    நா.முத்துக்குமாரின் சாமி பட பாடலுக்கு இதுவரை அர்த்தம் தெரியாமல் இருந்த ஹாரிஸ் ஜெயராஜ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது ராஜு ஸ்ரீவஸ்தவா மறைந்ததை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி