கோமாளி இயக்குநருக்கு காரை பரிசாக அளித்த தயாரிப்பாளர்

news18
Updated: September 21, 2019, 1:27 PM IST
கோமாளி இயக்குநருக்கு காரை பரிசாக அளித்த தயாரிப்பாளர்
கோமாளி
news18
Updated: September 21, 2019, 1:27 PM IST
கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் கோமாளி. 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி உள்ள கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக் குவித்தது.

இந்நிலையில் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

அந்த புகைப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.Also watch

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...