ரஜினியின் அரசியல் வருகையை கலாய்த்த ‘கோமாளி’ ட்ரெய்லர்!- வருத்தம் தெரிவித்த கமல்!

இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து #நாளையதமிழகம் ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர்.

news18
Updated: August 4, 2019, 6:22 PM IST
ரஜினியின் அரசியல் வருகையை கலாய்த்த ‘கோமாளி’ ட்ரெய்லர்!- வருத்தம் தெரிவித்த கமல்!
கமல்ஹாசன் | ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
news18
Updated: August 4, 2019, 6:22 PM IST
கோமாளி பட ட்ரெய்லரில் ரஜினிகாந்தின் அரசியல் வருகை விமர்சிக்கப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் வருத்தப்பட்டுள்ளார்.

அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இது அவரது 24-வது படமாக உருவாகியுள்ளது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார் . மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.


அதில், அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார்.

ஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.

இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து #நாளையதமிழகம் ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர்.

Loading...

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். இதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.படிக்க: ரஜினியை கலாய்த்தது ஏன்? - கோமாளி பட இயக்குநர் விளக்கம்!

 

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...