ரஜினிகாந்தின் அரசியல் வருகையைக் கலாய்த்த கோமாளி ட்ரெய்லர்!

தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

news18
Updated: August 3, 2019, 7:57 PM IST
ரஜினிகாந்தின் அரசியல் வருகையைக் கலாய்த்த கோமாளி ட்ரெய்லர்!
கோமாளி படத்தில் ஜெயம் ரவி
news18
Updated: August 3, 2019, 7:57 PM IST
கோமாளி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இது அவரது 24-வது படமாக உருவாகியுள்ளது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.


தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தின் பாடல்களை வெளியிட்டு வந்த படக்குழு ஆகஸ்ட் 15-ம் படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் முழுக்க ஜெயம் ரவியுடன் பயணித்துள்ளார் நடிகர் யோகி பாபு. மேலும் ஜெயம் ரவி தனது நினைவை மறந்து கோமாவால் பாதிக்கப்பட்ட நபராக தோன்றியுள்ளார். ட்ரெய்லரின் ஒரு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பதை டிவியில் செய்தியாக பார்க்கும் ஜெயம் ரவி இது 96-ம் வருடம். யாரை ஏமாத்துறீங்க” என்று கூறுகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட பல கெட்டப்புகளில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...